மண்ணிவாக்கம் பெரி கல்லூரியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மெகா பேரணி மற்றும் மனித சங்கிலி ஊர்வலம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 அக்டோபர், 2023

மண்ணிவாக்கம் பெரி கல்லூரியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மெகா பேரணி மற்றும் மனித சங்கிலி ஊர்வலம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள பெரி கல்லூரியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மெகா பேரணி மற்றும் மனித சங்கிலி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் காவல் ஆணையர் ஏ.பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ், கலந்து கொண்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மெகா பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்வை கொடியசைத்து துவக்கி வைத்தார். பாலினம் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான இந்த மெகா பேரணி மற்றும் மனித சங்கிலி ஊர்வலம் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் மண்ணிவாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடாச்சலம் மற்றும் வண்டலூர் போக்குவரத்து ஆய்வாளர் ஹேமாத்குமார் பங்கேற்றனர்.மேலும் பெண் குழந்தைகள் தொடர்பான தலைப்பில் ஓவியங்கள் வரைதல் மற்றும் ஸ்கிரிப்டுகள் போர்டுகள் போன்றவற்றை  தயாரிக்கும் போட்டிகள் வைத்து அதில் சிறந்த 10 நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பெரி கல்லூரியில் பயிலும் ஆர்ட்ஸ் குரூப் மாணவ மாணவிகள் 2500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad