தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று (15.02.2024) ரூ.1.25 கோடி செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சி டி ஸ்கேன் இயந்திரத்தினை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி,இ.ஆ.ப., தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் செ.ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் ர.சிவ ஆனந்தி, திருச்செந்தூர் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ்,
இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) (பொறுப்பு) மரு. பொன் ரவி, திருச்செந்தூர் தலைமை மருத்துவ அலுவலர் மரு. பாபநாசகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக