கொளத்தூரில் வாலிபரிடம் வழிப்பறி செய்த திருநங்கைகள் இருவர் கைது இருசக்கர வாகனம் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 ஜூன், 2024

கொளத்தூரில் வாலிபரிடம் வழிப்பறி செய்த திருநங்கைகள் இருவர் கைது இருசக்கர வாகனம் பறிமுதல்.


கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் வாலிபரிடம் வழிப்பறி செய்த திருநங்கைகளை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


கொளத்தூர் ராஜமங்களம்   200 அடி சாலை செந்தில் நகர் அருகே பிரபல உணவகம் உள்ளது . அதில் நேற்று முன்தினம் இரவு அங்கு தேனீர் அருந்தவந்த  மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த அருன்ஜேம்ஸ் (வயது 25) அவருடைய நண்பர் கௌதம் என்பவரும் வந்திருந்த போது அங்கு திருநங்கைகள் அவருக்கு ஆசீர்வாதம் செய்வதாக கூறி அவரை தனியே அழைத்துச் சென்று அவரை மிரட்டி அவரிடமிருந்த பணம் 8000 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி மறைந்தனர்.


இச்சம்பவம் குறித்து அருண்ஜேம்ஸ்  ராஜமங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை  கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து தேடிவந்த நிலையில் ரெட்டேரி சாலை சந்திப்பு அருகே சாலையில் திரிந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த ஆதிரா ( வயது 20) சௌமிஸ் (வயது 25) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் வாலிபரிடம் பணம் பறித்தது தெரியவந்தது.


பின்னர் ராஜமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி இவர்கள் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்த பேசினோ இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/