மயிலாடுதுறையில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 ஜூன், 2024

மயிலாடுதுறையில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.


போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில் மதுவிலக்கு எதிர்ப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா அவர்கள் ஏற்பாட்டின் படி மயிலாடுதுறை நகரப் பகுதியான புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு, சப்ஜெயில் கார்னர், கூறைநாடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல்கள் திரையிட்டும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர்கள் திருமதி அன்னை அபிராமி மயிலாடுதுறை திருமதி ஜெயா சீர்காழி காவல் ஆய்வாளர் திரு. செல்வம்  ACTU மற்றும் தலைமை காவலர் திருமதி. கார்குழலி  ஆகியோர் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு  நடன நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/