தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி விருந்து அளித்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 நவம்பர், 2024

தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி விருந்து அளித்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி.


தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு புதூர் பூங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி விருந்து அளித்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி.


தமிழக துணை முதலமைச்சர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த  ஜம்மணப்புதூர் பூங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது. 


பின்னர் சட்டமன்ற உறுப்பினர் மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா மற்றும் இனிப்புகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்த அறுசுவை விருந்தான  முட்டையுடன் கூடிய பிரியாணியை மாணவ மாணவிகளுக்கு பரிமாறி பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி உணவு அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆதித்யா, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் மாணவரணி அமைப்பாளர் வெங்கடேஷ், துணை அமைப்பாளர்கள் கேசவன், சுரேஷ் கௌதம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad