பின்னர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கினார். முதல் பரிசு ரூபாய். 10,000 இரண்டாம் பரிசு. 7000 மூன்றாம் பரிசு ரூபாய் .5000 என ஆண்கள் பெண்கள் என இரு பிரிவினருக்கும் பரிசுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தேசிய அளவில் கபடி போட்டியில் நெமிலி அடுத்த பல்லாவரம் அரசுப்பள்ளி மாணவி யுவராணி வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். அவருக்கு ரூ.20,000/- பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதனை, தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் பெ. வடிவேலு தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. இதில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு, நகர செயலாளர். ஜனார்த்தனன், நெமிலி தலைவர் ரேணுகாதேவி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுக்கா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக