அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 டிசம்பர், 2024

அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்


விழுப்புரம்  மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட ஓலக்கூர் பகுதிக்குட்பட்ட  அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு  மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்  கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட அடையாள அட்டை இல்லாத 100 மாற்றுத்திறனாளிகள்  நபர்கள் அழைக்கப்பட்டு, 51 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு   மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி மருத்துவ குழுவுடன் பேச்சு பயிற்சியாளர் திருமதி.அபிசேகா,, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் திரு.நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad