திங்கள்கிழமை 23.12.2024 காலை 10.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ,மூளை முடக்குவாத்த்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள் 10 நபர்களுக்கும். தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பாட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 5 நபர்களுக்கும்,. பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான திறன்பேசிகள் 5 நபர்களுக்கும்.
மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உதவும் ஆவாஸ் எனும் மென்பொருள் அடங்கிய கைக்கணிணி 6 சிறப்புப் பள்ளிகளுக்கு தலா ஒன்று வீதம்
மொத்தம்.29 பயனாளிகளுக்கு ரூ.12,07,240/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக