நெய்வேலி அருகே உள்ள சேப்ளாநத்தம் அரசு உயர்நிலை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சேப்ளாநத்தம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது, இங்கு மாணவ மாணவிகளுக்கு சத்துணவு மையம் மூலம் மதிய உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் மதிய உணவை சாப்பிட்ட ஏழாம் வகுப்பு மாணவிகளான துளசி, அட்சயா, செல்வநாயகி, பூமிகா மற்றும் நர்மதா ஆகிய ஐந்து மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் இதனை மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தும் ஆசிரியர்கள் பெற்றோரிடம் தெரிவிக்காமல் மாணவர்களை வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் மாணவிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளியில் சமைத்த மதிய உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக