ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேருந்து நிலையத்தில்நெமிலி மத்திய ஒன்றிய திமுகசார்பில் அறிவாசனுக்கு நினைவஞ்சலி! பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 54வது நினைவுதினத்தை அனுசரிக்கும் விதமாக நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்களின் தலைமையில் திமுகவினர் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் நெமிலி மத்திய ஒன்றிய அவைதலைவர் நரசிம்மன் நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன் மாவட்ட பிரதிநிதி சம்பத் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.முரளி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், எல்லப்பன், ராஜேஷ், மேலேரி மனோகரன், சீனிவாசன், வட கண்டிகை மூர்த்தி, தாமு மற்றும் திமுக கழகத்தினர் இதில் கலந்துக்கொண்டனர்.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக