ராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி அடுத்த கோடம்பாக்கம் கிராமத்தில் நெமிலி மதிய ஒன்றிய திமுக சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய ஒன்றிய சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர். வேதானந்தம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி .பெருமாள் கலந்து கொண்டு வேட்டி, சேலை ,அரிசி மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்வில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள் ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன் ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், சரள முரளி ஒன்றிய மாணவரணி நிர்வாகி வக்கீல் ராஜேஷ் பொருளாளர். செல்வம் மாவட்ட பிரதிநிதி சம்பத் மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக