வடலூரில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு வடலூரில் நடந்தது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 டிசம்பர், 2024

வடலூரில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு வடலூரில் நடந்தது.


தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர், துணை தலைவர், மாநில பொது செயலாளர், மாநில பொருளாளர், மாநில செயலாளர்கள் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பதவிக்கு சசிகுமார், விஜயபாஸ்கர், ஜீவரத்தினம், மாநில பொதுச் செயலாளர் பதவிக்கு குமார், வீரபாண்டியன், பொருளாளர் தியாகராஜன், நல்லகவுண்டன், துணைத் தலைவர் ஜான் போஸ்கோ, ரகுவரன், விஜயகுமார், செயலாளர்கள் புஷ்பகாந்தன், உதயசூரியன், பவளச்சந்திரன், ராஜா, கலைச்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 


இந்த மாநில அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலையொட்டி  அந்தந்த மாவட்டங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி மையம்  அமைக்கப்பட்டிருந்தது.


மாநில தேர்தல் ஆணையர் ராஜரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மயிலாடுதுறை மணிகண்ட கமலநாதன்,சரவணன் ஆகியோர்கள் தேர்தலை நடத்தினர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 59 பெண்கள் உட்பட 263 கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து ஆர்வமுடன் வாக்களித்தனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad