நெமிலி அருகே பனப்பாக்கம் தொழிற் பூங்காவில் காலனி உற்பத்தி தொழிற்சாலைக்கு காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 டிசம்பர், 2024

நெமிலி அருகே பனப்பாக்கம் தொழிற் பூங்காவில் காலனி உற்பத்தி தொழிற்சாலைக்கு காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.


ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.12.2024) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்ஃபு (Hang Fu) நிறுவனம் 1,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 


இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை‌  ஆர்.காந்தி  மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்,முனைவர். டி.ஆர்.பி. ராஜா அவர்கள், தலைமைச் செயலாளர். நா. முருகானந்தம், இ.ஆ.ப, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் .வி. அருண்ராய், இ.ஆ.ப, தோல் ஏற்றுமதி கவுன்சில் செயல் இயக்குநர் ஆர். செல்வம், இ.ஆ.ப. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் . வே. விஷ்ணு. இ.ஆ.ப. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) மேலாண்மை இயக்குநர் மருத்துவர். கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் 4. அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., ஹோங்ஃபு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் . T.Y. சாங், இயக்குநர் . ஜாக்கி சாங், JV பங்குதாரர் மற்றும் இயக்குநர். அதில் பணாருனா, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


செய்தியாளர். மு.பிரகாசம் .நெமிலி தாலுக்கா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad