விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்வி பயிலும் பணிக்கு செல்லும் பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக செயலியுடன் கூடிய ரூ.13500 / மதிப்புள்ள திறன் பேசிகள் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒன்று வீதமும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் இயற்கை மரணம் எய்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஈமசடங்கு உதவித்தொகை அவர்களின் வாரிசுகளுக்கு ரூ.17000/- வீதம் 11 நபர்களுக்கும்.விபத்தினால் மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிக்கு நிவாரன தொகை ரூ.200000/- க்கான காசோலை அவரது வாரிசுக்கு என 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,37,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி பேச்சுப்பயிற்சியாளர் திருமதி.அபிசேகா. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் GB குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக