வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் அறிவியல் திட்டத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப ஆலோசனை குழு இணைந்து அறிவியல் திட்டத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி கல்லூரி உள்ளறங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் திலீப் குமார் ஜெயின், செயலாளர் ஆனந்த் சிங்வி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் எம்.இன்பவள்ளி முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாய்வான் டாஸ்யோன் பயோடெக் இயக்குநர் பிரகாஷ் ஏகாம்பர கலந்து கொண்டு அறிவியலின் பயன்பாடுகள் மற்றும் அதன் ஆராய்ச்சி குறித்தும் அறிவியல் துறையில் சாதித்தவர்கள் குறித்தும் விளக்கி பேசினார். மேலும் கற்றாழையின் மருத்துவ பயன்களையும் அதன் ஆராய்ச்சி குறித்தும் தெளிவாக விளக்கினார்.
நிகழ்ச்சியில் வினாடி வினா, கருத்துரை, அறிவியல் கண்காட்சி போன்ற போட்டிகளில் 77 மாணவிகள் கலந்து கொண்டு அவர்களது அறிவியல் புதுமையை காட்சி படுத்தினர். கருத்தரங்கில் 556 மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியை உயர்தொழில் நுட்பவியல் துறை தலைவர் முனைவர் மா.கோமதி மற்றும் உட்டத்சத்து துறை தலைவர் ரா.மகாலக்ஷ்மி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக