மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில்,
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை சென்னை சைதாப்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து
இன்று திருப்பூர் மாநகராட்சி 22 வது வார்டு பகுதியில் உள்ள கடை எண் பிச்சம்பாளையம் 008 மற்றும் பத்மவதிபுரம் கடை எண் 91 மற்றும் ராஜிவ் காந்தி வீதி கடை எண் 47 மற்றும் ஓலபாளையம் கடை எண் 65 ஆகிய நான்கு கடைகளிலும் மாமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
உடன் 22 வது வார்டு செயலாளர் வி. ராஜ்குமார் திருப்பூர் வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் செ.குப்புசாமி திருப்பூர் வடக்கு மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் R வேலுச்சாமி திருப்பூர் வடக்கு மாநகர மகளிர் தொண்டர் அணி துணை தலைவர் தேவகி திருப்பூர் வடக்கு மாநகரம் அண்ணா காலனி பகுதி கழக சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ராஜன் பூபதி மனோகரன் ஸ்கூல் வீதி குமார் ஸ்கூல் வீதி பழனிசாமி எத்திராஜ் கண்ணன் ரமணி ஈஸ்வரி மயில்சாமி திருமூர்த்தி தேவி உஷா ஷகிலா பேகம் பாலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் புகைப்பட கலைஞர்
கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக