இதில் இருசக்கர வாகனத்தில் வந்த என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளியான தங்கதுரை (வயது 47) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார், விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்காட் கிரேன் வாகனம் மோதி என்.எல்.சி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்நிறுவனத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் சுரங்கம் இரண்டு பகுதியில் இருந்து என்.எல்.சிக்கு சொந்தமான எஸ்காட் கிரேன் வாகனம் ஒன்று மந்தார குப்பத்தில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென சாலையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஏறியது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக