வேலூர் ,ஜன 25 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய கணித அறிவியல் நிறுவனம் மற்றும் வேலூர் ஶ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து 32வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நாளை 25.01.2025 காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4 .30 மணி வரை நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பே.அமுதா தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். ஶ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் துணைத்தலைவைர் என்.ஜனார்த்தனன் ஆய்வுக்கட்டுரை சமர்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியும் தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிளுகள் ஆ.ஜோசப்அன்னையா, ஐ.உமாதேவன், பொன்.வள்ளுவன், என்.கோட்டீஸ்வரி, எஸ்.எஸ்.சிவவடிவு, வி.ஜெயந்தி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டியும் பேசினார். மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணைத்தலைவர் கே.விசுவநாதன். கல்லூரியின் முதல்வர் எம்.ஞானசேகரன், ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கல்வி அலுவலர் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் கோபால இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் க.பூபாலன், வேலூர் கிளை தலைவர் முத்து.சிலுப்பன், கல்வி ஒருங்கிணைப் பாளர் ஆர்.காயத்ரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.இராஜேந்திரன் சா.குமரன், மாவட்ட துணைத்தலைவர் கே.தேவி, இணை செயலாளர் எ.பாஸ்கரன், கணியம்பாடி வட்டார தலைவர் எம்.காசிநாதன், செயலாளர் எம்.முரளி, பொருளாளர் டி.விஜயகுமாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பாராட்டப்பட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வீரா.குமரன் நன்றி கூறினார்.
இந்த அறிவியல் மாநாட்டில் முதுநிலை மாணவர்கள் 52 குழுக் களாகவும் இளநிலை மாணவர்கள் 44 குழுக்களாகவும் மொத்தம் 96 குழுக்களில் 20 பள்ளிகளை சார்ந்த 192 மாணவ மாணவிகள் 35 வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர் . மண்டல அளவிலான போட்டிக்கு 11 ஆய்வறிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவர்கள் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி வடக்கு மண்டல அளவில் நடைபெறும் மாநாட்டில் ஆய்வறிக்கைகளை சமர்பிக்க உள்ளனர்.
வேலூர மாவட்டம் தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக