வேலூர் பாலாற்றங்கலையில் உள்ள இலங்கை கண்டியை ஆண்ட கடைசி மன்னன் விக்ரமசிங்க மகாராஜரின் சமாதியில் குருபூஜை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

வேலூர் பாலாற்றங்கலையில் உள்ள இலங்கை கண்டியை ஆண்ட கடைசி மன்னன் விக்ரமசிங்க மகாராஜரின் சமாதியில் குருபூஜை !


வேலூர் ,ஜன 30 -

வேலூர் பாலாற்றங்கலையில் உள்ள இலங்கை கண்டியை ஆண்ட கடைசி மன்னன் விக்ரமசிங்க மகாராஜரின் சமாதியில் குருபூஜை இலங்கை கண்டியை ஆண்ட கடைசி மன்னன் கண்ணுசாமி நாயுடு என்கிற ராஜா விக்ரமசிங்க மகாராஜரின் 193 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி குருபூஜை இன்று வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு பாதுகாத்து வரும் முத்து மண்டபத்தில் வாரிசுதாரர்களால் நினைவு நிகழ்வு நடைபெற்றது 
மன்னரின் தற்போதைய வாரிசுகளான ஆர்.புருஷோத்தமராஜா, நவநீதா, மஞ்சுநாதராஜா, குப்புசாமி நாயுடு குடும்பத்தினர் நீத்தார் வழிபாடு சடங்குகளை நடத்தினர்.பின்னர் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நீத்தார் வழிபாடு நினைவஞ்சலி கூட்டத்திற்கு தமிழ்நாடு நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் எல்.சடகோப இராமானுஜம் நாயுடு தலைமை தாங்கினார். முன்னதாக மன்னரின் வாரிசுதாரர் ஆர் புருஷோத்தம ராஜா வரவேற்று பேசினார். 
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில முத்தரையர் சங்கத்தின் தலைவரும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பின் வடக்கு மண்டல தலைவர் மு ராஜமாணிக்கம்,  ஓ பி சி கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் செவன் ஜி முரளிதரன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர்எஸ்.என்.ஜனார்த்தனன்,  மாவட்ட யாதவர் மகாசபை தலைவர் எம்.சி.லோகு,  மாவட்ட போயர் சங்க தலைவர் வெங்கடேசன்,  நன்னெறி கல்வி இயக்க செயலாளர் ஜி ராமகிருஷ்ணன், தெலுங்கர் முன்னேற்ற கழக தலைவர் ஆர்.பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் விக்ரம ராஜசிங்க மகாராஜா அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.மாதவன் நன்றி கூறினார். இலங்கையை பன்னெடுங் காலமாக தமிழ் மன்னர்களே ஆண்டு வந்தனர். சோழ மற்றும் பாண்டிய வம்சத்தைச் சார்ந்தவர்கள் பலரும் இலங்கையை ஆட்சி புரிந்திருக் கின்றனர். அவ்வகையில் ஆங்கிலேயர் காலம் வரையிலும் தமிழ் மன்னர்களே இலங்கையை ஆண்டு வந்தனர். அப்படி கடைசியாக இலங்கையின் மன்னராக இருந்தவர் விக்கிரம ராஜசிங்கன்.
மதுரை நாயக்க அரசர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1798-ம் ஆண்டு இலங்கையின் மன்னராக முடிசூட்டப்பட்டு ஆட்சி புரிந்து வந்தார். ஆங்கிலேயப் படையை எதிர்த்து மூன்று முறை நடந்த போர்களில் வெற்றிபெற்று சுமார் 18 ஆண்டு காலம் இலங்கையை ஆண்டார். 1815-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி வெள்ளையருடன் நடந்த போரில் தோற்ற இவர், சிறைக் கைதியாக பிடிக்கபட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டார். மார்ச் 2-ம் தேதி வேலூர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.கைதியாக இருந்த அவர் 1832-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் தனது 52 -வது வயதில் சிறையிலேயே காலமானார். ராஜசிங்கன் சமாதியும் அவரது மனைவிகள் மற்றும் மகன் ரங்கராஜன் ஆகியோரது கல்லறைகள் வேலூர் பாலாற்று கரையோரம் அமைந்திருந்தது. இந்தத் தகவல் தெரிந்ததும் அவர்களின் நினைவாக 1990-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் தமிழக அரசின் சார்பில் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் நினைவாக முத்து மண்டபம் கட்டப்பட்டது. இப்போது அது அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  ராஜசிங்கன் நினைவு நாளை அவரது வம்சாவளியினர் ஆண்டுதோறும் குருபூஜை தினமாக அனுசரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad