ஊட்டியில் உறைபனி.
நீலகிரி மாவட்டம் உதகையில் மழை நின்றபிறது உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. அதிகாலையில் வென்கம்பளம் விரித்தது போல் புல்வெளிகளில் கொட்டிக்கிடந்த உறைபனியை சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர். கடும் குளிருக்கு வாடகை வாகன ஓட்டுனர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். விவசாயிகள் கூறுகையில் பனிப்பொழிவால் அட்டை பூச்சிகள் அழியும் மண்ணின் விஷத்தன்மை நீக்கி மண்வளம் பெருகும் என தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக