உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் பகிர்மன் கழகத்தின் சார்பில் மின் சிக்கன வார விழா பேரணி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் பகிர்மன் கழகத்தின் சார்பில் மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி செயற்பொறியாளர் சர்தார் தலைமையில் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணி வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் காவல் ஆய்வாளர் வீரமணி உதவி செயற்பொறியாளர் சிவராமன் ஐய்யம்பெருமாள் நகராட்சி ஆணையர் இளவரசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் மேலும் உளுந்தூர்பேட்டை முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று மின் சிக்கன பதகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஊர்வலம் சென்றனர் மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மின் சிக்கனம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் விரிவான சிறப்புரை ஆற்றினார்கள் இந்த பேரணியில் மின் பொறியாளர்கள் மின் ஊழியர்கள் தொழிற்கல்வி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக