அரசு பஸ் முதல் பெண் கண்டக்டருக்கு பாராட்டு: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

அரசு பஸ் முதல் பெண் கண்டக்டருக்கு பாராட்டு:


அரசு பஸ் முதல் பெண் கண்டக்டருக்கு பாராட்டு:

 கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி இவர் கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணிபுரிந்து வந்தார் அவர் கடந்த ஆண்டு இறந்தார் இதையடுத்து கருணை அடிப்படையில்  தனக்கு பணி வழங்குமாறு அவரது மனைவி சுகன்யா, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினார் தொடர்ந்து அவருக்கு பணிநியமன ஆணை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார் இந்தநிலையில் நேற்று கோத்தகிரி அரசு போக்குவரத்து  கிளையில் சுகன்யா கண்டக்டராக பணியில் சேர்ந்தார் நேற்று அவர் கோத்தகிரியில் இருந்து சோலூர்மட்டம் செல்லும் பஸ்சில் கண் டக்டராக பணியாற்றினார் அவரை கோத்தகிரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் மற்றும் பொதுமக்கள், தொழிற் சங்கத்தினர், சக ஊழியர்கள் பாராட்டி ஊக்குவித்தனர், கண்டக்டர் பணியில் சேர்ந்த பெண் கண்டக்டரை முதல்-அமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ் முதல் பெண் கண்டக்டர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்க நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad