எச்.டி.எப்.சி எர்கோ மருத்துவ காப்பீட்டு விழிப்புணர்வு வாகனத்தை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துவங்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியில், எச் டி எப் சி எர்கோ மருத்துவ காப்பீட்டு விழிப்புணர்வு வாகனத்தை மண்டபம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் R.G.மருதுபாண்டியன்,கொடியசைத்து துவங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர், வே.செந்தில்குமார்
மற்றும் அமைப்பு நிர்வாகிகள் அறிவழகன்,ஹிதாயத்துல்லா,பராசக்தி உட்பட எச்.டி.எப்சி.அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் இந்த வாகனமானது இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மேலும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்கிறது. ஒரே கட்டணத்தில் ஆயுள் காப்பீடு,மருத்துவம் வீட்டு மனைக்கான காப்பீடு சேர்ந்து கவராகின்றது. அதன் பயன்கள் விளக்கும் விதமாக முழு விழிப்புணர்வை.மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சார வாகனத்தின் மூலமாக தனது சேவையை தொடங்கி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக