கோத்தகிரி நகரில் வேகத்தடையை சீரமைக்க கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரில் காமராஜர் சதுக்கம் முதல் பேருந்து நிலையம் வரை பள்ளிகள் உள்ளதால் வாகன நெரிசல் உள்ள நிலையில் குழந்தைகளின் நலனுக்காக வேகத்தடை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் நீலகிரி வருகைக்காக வேகத்தடைகள் அவசர கதியில் அகற்றப்பட்டது. காலம் கடந்த நிலையில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. குண்டும் குழியுமான வேகத்தடை அவசர கதியில் அகற்றப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் வேகமாக இயக்குவதால் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன் கோத்தகிரி நகரில் காமராஜர் சதுக்கம் முதல் பேருந்து நிலையம் வரை பள்ளிகள் இருக்கும் பகுதி வேகத்தடைகளை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக