நேரு யுவகேந்திரா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
நேரு யுவகேந்திரா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் HADP விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிலம்பம், கயிறு இழுத்தல், கைப்பந்து, 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் தமிழியக்கம் செயலாளர் புலவர் இர.நாகராஜ், தன்னார்வலர் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், அன்பு அறக்கட்டளை நிறுவனர் சதிஷ், காவல் துறை சுரேஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கி கெளரவித்தனர். நிகழ்வுகளை நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தார். புலவர் இர.நாகராஜ் உதகை ஆகியோர் உடன் இருந்தனர்
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக