ஊராட்சி மன்ற தலைவர்மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

ஊராட்சி மன்ற தலைவர்மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு!


ராணிப்பேட்டை , பிப் 4 -

ராணிப்பேட்டை மாவட்டம்
காவேரிப்பாக்கம் ஒன்றியம் துறைபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லக்கிளி மூர்த்தியை, திமுக ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி  என்பவர் எந்த ஒரு பணியும் செய்யவிடாமல் தடுப்பதாகவும் என்னை மீறி எப்படி நீங்கள் கட்டிடம் கட்டுவீர்கள், அப்படி மீறி கட்டினால் உங்களை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கி விடுவேன் என்று  அடிக்கடி மிரட்டிப் பேசுவதாக கூறி இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில்  பொதுமக்களுடன் வந்து இருந்து புகார் மனு அளித்தார்.அந்த மனுவில் ஒன்றிய குழு தலைவர் என்னை வேலை செய்ய விட்டால் மட்டுமே எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்னால் எனது பணியை தொடர்ந்து செய்ய முடியும் என்று மனுவை வழங்கினார் எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த புகார் மனுவை ஏற்று ஒன்றியக் குழு தலைவர் அனிதா குப்புசாமி  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் ஊர் மக்களுடன் வந்து மனு வழங்கி சென்றார்.
மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு தலைவர் மீது குற்றம் சாட்டி திமுக ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது!

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad