இராமேஸ்வரம் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
கச்சத்தீவு புனிதப் பயணம் செய்பவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா வருகின்ற 14.03.2025 மற்றும் 15.03.2025 ஆகிய நாட்களில் நடைபெறுவதையொட்டி இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து கச்சத்தீவு புனித பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதற்கு இந்திய கடலோர காவல்துறை, இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை,சுங்க இலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இராமேஸ்வரம் நகராட்சி சுகாதாரத்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன் இவ்விழாவில் பங்கேற்பதற்கு உள்ள மீனவ அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறிந்து தெரிவிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கச்சத்தீவு புனித பயணம் மேற்கொள்ள இந்தியா மற்றும் இலங்கை அரசு களின் வழிகாட்டுதலின்படி இரு நாட்டு மக்களும் அனுமதிக்கப்பட்டு விழாவில் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் புனித பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் முன் பதிவு செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்ததின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி பெற்று செல்லக்கூடியவர்கள் அரசு வழிகாட்டின்படி தங்கள் பயன்பட்டிற்கான உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை தவிர வேறு பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டது எனவும் அதேபோல அனுமதிக்கப்பட்ட படகுகள் மட்டுமே சென்று விழாவில் பங்கேற்று பாதுகாப்புடன் சென்று வர வேண்டும் மேலும் 14.03.2025 அன்று பயணம் செய்ய உள்ள பொதுமக்கள் அதிகாலை 5 மணிக்கு வந்து உடைமைகளுடன் பரிசோதனைக்கு உட்படுத்தி பயணித்திடவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து புனித பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், தெரிவித்துள்ளார் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு சுங்க இலாக துணை கமாண்டன்ட் பிரகாஷ் இன்ஸ் பருந்து கமாண்டான்ட் ராகுல் வேர்க்கோடு தேவாலய அருட்தந்தை மற்றும் அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக