திருக்கோவிலூரில் அனைத்து கட்சி கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

திருக்கோவிலூரில் அனைத்து கட்சி கூட்டம்

 


திருக்கோவிலூரில் அனைத்து கட்சி கூட்டம் 


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள எம் ஜே மஹாலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 ஊராட்சிகளை  விழுப்புரம் மாவட்டத்துடன் இணைப்பது குறித்து அமைச்சர்  பொன்முடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமும் மனு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் அவ்வாறு இணைப்பது என்பது பொது மக்களுக்கு மேலும்  சில சிக்கல்கள் உருவாகும் என்றும் அதற்கு மாறாக வரலாற்று சிறப்புமிக்க அனைத்து கட்டமைப்புகளையும் கொண்ட திருக்கோவிலூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிப்பதனால் மக்களுக்கு ஏற்படும் நிர்வாக சிக்கல்கள் தீர்க்கப்படும் என்ற கருத்தை முன்வைத்து அனைத்து கட்சி நிர்வாகிகள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி தீர்மானமும் போடப்பட்டது. இதில் மமக, விசிக, அதிமுக, தேமுதிக, பாமக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, கோவல் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad