உளுந்தூர்பேட்டையில் செல்போன் டவரில் ஏரி இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

உளுந்தூர்பேட்டையில் செல்போன் டவரில் ஏரி இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

 


உளுந்தூர்பேட்டையில்   செல்போன் டவரில் ஏரி இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு... 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹலிம் வயது 20 என்பவர் சென்னையில் தனியார்  கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்  அப்போது இவருடன் பணிபுரிந்த ஒரத்தூரைச் சேர்ந்த புவனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த  நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புவனாவை ஹலீம் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணத்திற்கு உடன்படாத பெண்ணின் பெற்றோர்கள் புவனாவை இவரிடம் வாழ விடாமல் பிரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது தனது மனைவியை பிரித்துச் சென்றதால்  செய்வதறியாமல் தனது வீட்டு அருகே இருக்கின்ற செல்போன் டவரின் மீது ஏறி நின்று நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றும் தனது  காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டி கோரிக்கை வைத்த நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள செல்போன் டவரில் ஏரி தான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி கொண்டு செல்போன் டவரின் உச்சியின் மீது ஏறி நின்று கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டுடார் இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த  உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கீழே இறங்கி  வருமாறு கேட்டுக் கொண்டனர் அதற்கு எனது காதலியை இப்போது இங்கே வரவைக்க வேண்டும் என்றும் அவலுடன் நான் பேச வேண்டும் என்றும் அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்றும் காவல்துறையினருக்குகோரிக்கை வைத்து  போராட்டத்தை தொடர்ந்தார் இதனால் காவல்துறையினர் அவனது காதலியை கார் மூலம் அழைத்து வந்து அவனிடம் காண்பித்த பிறகு அவன் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்த அவனை உடனடியாக மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்பு அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் தனது காதலியோடு தன்னை சேர்த்து வைக்க வேண்டி செல்போன் டவர் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad