அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தால் பெருமை என்ற நிலை மாறி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமோ என்ற நிலை உருவாகியுள்ளது. திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் பார்ட்டிகள் வரை பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தை பேராபத்து சூழ்ந்துள்ளது இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கான போர் பிரகடனம் எடப்பாடியார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் ஆதரவு தர வேண்டும் என நெல்லை டவுணில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கணேஷ் ராஜா தலைமையில் நெல்லை டவுண் வாகையடி முனையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களது 108 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மக்கள் விரோத அரசு எதனையும் மக்களுக்காக செய்யாமல் செயலிழந்து உள்ளது. மன்னராட்சியை மலர செய்ய மக்கள் ஆட்சியை குழி தோண்டி புதைக்கு செயலை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் ஆளுனர் உரை ஆண்டின் தொடக்கத்தில் வாசிக்கப்படும்.
ஆளுனர் உரையில் நிதி நிலை அறிக்கையில் செய்த செயல்பாடுகள் முன்னோட்டமாக இடம்பெறும்.3 ஆண்டுகளாக ஆளுனர் உரை வரலாற்றில் இல்லாத வகையில் வாசிக்கப்படாமல் பதிவு செய்யப்படுகிறது. ஆளுனர் உரை அனைத்தும் புகழ்பாடும் பதிவுகளாக இருப்பதால் ஆளுனர் அதனை புறக்கணித்துள்ளார்.
நாட்டின் நிலை அறிக்கை வரவேற்கதக்க அம்சங்கள் இருந்த போதிலும் அது நாட்டிற்கான அறிக்கையாக இல்லாமல் அது பிகாருக்கான நிதியாக அமைந்துள்ளது. மெட்ரோ திட்டத்திற்கு நிதி இல்லை மக்கள் திட்டத்திற்கு நிதி இல்லை.இதனை கேட்காமல் பிடித்து வைத்த பிண்டங்களாக தமிழக எம்.பிக்கள் இருக்கின்றனர் என எதிர்கட்சி தலைவர் கேள்வி கேட்கிறார். தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டது ஆனால் திமுகவால் நிறைவேற்றப்படவில்லை.
நீட் ரத்து,கல்வி கடன் ரத்து,இளைஞர் வேலைவாய்ப்பு, பெட்ரோல் டிசல் குறைப்பு போன்றவைகளை சொல்லிவிட்டு எதனையும் செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து கேள்வி கேட்டதற்கு விஞ்ஞான ரீதியில் முதல்வர் பதிலளித்தார்.நீட் ரத்து என்னாச்சு என கேட்டால் பாரத பிதமராக ராகுல் வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என முதல்வர் சொல்கிறார்.
மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றி முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். மாணவர்கள் நலன் மீது அக்கறை கொண்டு 7.5% உள் இட ஒதுக்கீட்டை லொண்டு வந்தோம் அதனை ஆளுனர் ஏற்க மறுத்தார். ஆனால் இப்போது திமுக சொல்வதை போல் நொண்டி சாக்கு எதனையும் சொல்லானல் அந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
சமூக நீதி என பேசுவதற்கு அதிமுக தவிர எந்த கட்சிக்கும் தகுதி கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி 11 மருத்துவகல்லூரிகள் கொண்டுவந்தார்.மொத்தமாக அதிமுக ஆட்சியில் 17 மருத்துவகல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் வாய்கிழிய பேசும் முதல்வர் இந்த 4 ஆண்டுகளில் ஒரு மருத்துவகல்லூரியை கூட கொண்டுவரவில்லை. அண்ணா பல்கலைகழகத்தில் படித்தால் பெருமை என்ற காலம் மாறிபோய் இப்போது அண்ணா பல்கலைகழகத்தில் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் ஞானசேகரன் உட்பட இன்னும் சிலர் இருப்பதாக சொன்ன போதிலும் அவசரம் அவசரமாக காவல் துறை இந்த விவகாரத்தில் ஒருவர் தான் குற்றவாளி என சொல்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் விசாரணை செய்ய நீதி மன்ற உத்திரவிட்டு ஐ.பி.எஸ் குழு அமைத்துள்ளது.மக்கள் மன்றமும் நீதிமன்றமும் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துள்ளது.அவர் இந்த பதவியை ராஜினமா செய்யவேண்டும். ஈ.சி.ஆர் ரோட்டில் திமுக கொடி கட்டிய காரில் பெண்கள் அச்சுறுத்திய காட்சிகள் இந்தியா முழுதும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.இந்த விவகாரத்திலும் காவல்துறை முன்னுக்கு பின் முரனாக சொல்கிறது.காவல்துறை இதுபோன்று பேசுவதற்கு நாங்கு வீட்டில் பிச்சை எடுக்கலாம்.திமுக ஆட்சியில் சிறுமிக்கும் பாதுகாப்பு இல்லை பாட்டிக்கும் பாதுகாப்பில்லை. காக்கிசட்டைக்கு என இருக்கும் கவரவமும் வரலாறும் இருக்கும் நிலையில் ஸ்டாலினின் ஏவல்துறையாக அடிமைதுறையாக மாறியுள்ளது.
சட்டமன்றத்திம் 2.30 நிமிடங்கள் எடப்பாடி பழனிச்சாமி சாமி பேசிய வீடியோவை தாருங்கள் என கேட்டதற்கு 45 நிமிட காட்சிகளை மட்டும் தந்துள்ளனர். அதில் ஒரு நிமிடம் கூட எடப்பாடியார் முகம்ப்பதிவாகவில்லை. தைரியமிருந்தால் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய முழு வீடியோவையும் வெளியிட வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் சொல்லிய திட்டத்தை எல்லாம் செயல்படுத்தாமல் அதிமுக அரசு மக்களை ஏமாற்றவில்லை. வேறொரு தலைவராக இருந்தால் முதல்வராகிவிட்டோம் கலர் விளக்குகள் பொறுத்திய காரில் பவனி வந்துவிட்டோம் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டத்தை இனி நிறைவேற்றினால் என்ன நிறைவேற்றாமல் போனால் என்ன இருந்திருப்பார்கள்.
2 ஆண்டுகளில் ₹30 ஆயிரம் கோடியை முதல்வரின் மகன் உதயனிதி ஸ்டாலினும் அவரது மருமகன் சபரீசனும் கொள்ளையடித்துவிட்டு எங்கு வைக்கபோகிறோம் என திக்கு தெரியாமல் திரிவிதாக 4 தலைமுறை அரசியலுக்கு சொந்தகாரர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் சொன்னார்.அவர் பதவி குறைக்கப்பட்டது.ஆனால் அவர் சொன்னது உண்மையா பொய்யா என இதுவரை சொல்லவில்லை.நான் சொன்னது தவறு என்றால் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அமைச்சர் பி.டி.ஆரை சேர்க்க வேண்டும்.எடப்பாடி பழனிச்சாமியை சாதாரணமாக முதல்வர் நினைத்தார்.
ஆனால் ஒவ்வொரு மக்கள் பிரச்சனைக்கும் அரசை உழுக்கி எடுத்து கொண்டிருக்கிறார்.ஆளும் திமுகவை தோளுரிக்கும் செயலை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்துவருகிறார். டங்க்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் அறிவித்த போதிலும் மக்கள் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் காரணமாகவே டங்க்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டங்க்ஸ்டன் ரத்து வருவதற்கு முதல் நாள் மதுரை சிவகங்கை போன்ற பகுதிக்கு வந்த முதல்வர் இந்த பிரச்சனை நடக்கும் மேலூருக்கு வரவில்லை.திட்டம் ரத்து செய்த உடன் முதல்வர் மேலூர் வந்துவிட்டார். இந்த திட்டத்திற்கு ஒரு எதிர்ப்பும் காட்டாமல் பங்களிப்பை செய்துவிட்டு எந்த முகத்துடன் மேலுருக்கு முதல்வர் வந்தார் என தெரியவில்லை.தமிழகத்தில் மிகப்பெரிய பேராபத்து சூழ்ந்துள்ளது.போராடிய சுதந்திரமும் ஜனநாயகமும் கேலி கூத்தாக மாறியுள்ளது.
தமிழக மக்கள் முட்டாள்களும் மடையர்களும் அல்ல.போராடி பெற்ற சுதந்திரத்தை மீட்க இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கான போர் பிரகடனம் எடப்பாடியார் தலைமையில் அறிவிக்கப்படுள்ளது. அதற்கு முதல் குரலாய் மக்கள் ஆதரவு தரவேண்டும் என கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக