சங்கராபுரத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கள்ளக்குறிச்சி,பிப்01.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனைச் சந்திப்பில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு மௌனமாக செயலாற்றிக் கொண்டு இருக்கின்றது.2 வருடங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் ஜாதி ஆணவத்தால்
நீர்த் தேக்கத் தொட்டியில் குடிதண்ணீரில் மலத்தைக் கலந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய திமுக அரசை வன்மையாகக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவர்களே குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கிய நீதித்துறையை தமிழக அரசின் காவல்துறையே இது சரிதானா ? பெரியார் மண் என்று சொல்லும் திராவிட மாடலே இது சரிதானா என்று புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக சமூக கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி புரட்சி பாரதம் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் ஓவியர் மு க பாபு தலைமையில் மாநில மூர்த்தியார் பேரவை செயலாளர் முனுசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி நிருவாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக