அரசு அங்கன்வாடி மையத்தில் மிகவும் சேதமடைந்து அறுந்து விழும் நிலையில் உள்ள மின்சார வயர்.
நாகர்கோவில் மாநகராட்சி 3 -வது வார்டுக்கு உட்பட்ட மேலபெருவிளை பகுதியில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 20-ற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. மின்கம்பத்தில் இருந்து அங்கன்வாடி வளாகத்திற்கு வரும் மின்சார வயர் கடந்த வருடம் அருந்து கீழே விழுந்தது.
வயர் மிகவும் சேதம் அடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் சில மாதங்களாக மின்சார வசதி இல்லாமல் இருந்து வந்தது.
மீண்டும் அந்த சேதம் அடைந்த மின்சார வயரை கடமைக்காக முடிந்து வைத்து உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இது எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழுந்து விபத்து ஏற்படலாம். குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஆய்வுக்காக வந்த உதவி பொறியாளர். தேவி அவர்கள் இதனை பார்வையிட்டு ஆபத்தாக உள்ளது உடனடியாக இதனை மாற்ற வேண்டுமென கூறிவிட்டு சென்றார்.
ஆனால் 10 - நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. பச்ச குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மின்சார வயர் மாற்றுவதில் ஏன் இவ்வளவு அலட்சியமாக செயல்படுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள் என பொதுமக்கள் கேள்வி?
அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக