நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். 

பணியில் இருந்து ஓய்வுபெறும் உதவி தலைமை ஆசிரியைகள் சாரா ஞானபாய் மற்றும் அருள் ராணி மாணிக்கவல்லி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தொழிற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் ஜெயக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து பாடல்களை பாடினர்.தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் வேத பாடம் வாசித்தார். கணினி ஆசிரியர் செல்வின் பொன்தாஸ் வரவேற்றார்.ஆங்கில ஆசிரியை ஐடா, தமிழ் ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா, கணித ஆசிரியை பாலின் சோபா, இடைநிலை ஆசிரியர் பட்டுராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஓய்வு பெறும் ஆசிரியைகள் ஏற்புரை வழங்கினர்.ஓய்வுபெறுபவர்களுக்கு ஆசிரியர்கள், அலுவலர்களின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், நிர்வாகப் பிரிவு ஆசிரியைகள் எஸ்தர், மெர்லின், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஷன் கிறிஸ்டோபர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad