அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22வது நாள் காத்திருப்பு போராட்டம் அண்ணாமலை பல்கலைக்கழக பூமா கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது இன்றைய போராட்டத்திற்கு தலைமையேற்று ஓய்வூதியர் அங்குசாமி, பணி இடமாற்ற ஊழியர் பாலசண்முகம் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஒருங்கிணைப்பாளர்கள் மதியழகன், துரை, குமரவேல், சந்தானகிருஷ்ணன், விவேகானந்தன், காமராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் நாளைய தினம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பூமா கோவில் வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவிக்கும் மே தின பேரணி நடைபெற இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
- கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக