மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி !
வேலூர் , ஏப் 27 -
வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆர்.ஈ.சி. லிமிடெட் (REC Limited) சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள்
கலந்துக்கொண்டு மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். வேலூர் அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் அவர்கள் ஆர்.ஈ.சி. லிமிடெட் நிறுவனம் தனி இயக்குநர் திரு.நாராயணன் திருப்பதி அவர்கள் மாநகராட்சி மேயர் A.சுஜாதா, துணை மேயர் M.சுனில்குமார் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர் கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக