இளைஞர் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக மீட்பு . - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

இளைஞர் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக மீட்பு .

இளைஞர் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக மீட்பு .

கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் காவல் நிலைய  எல்கைக்கு உட்பட்ட கீழக்கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜகோபாலன் என்பவரது மகன் ஹரிஹரன் (22) என்பவர் இன்று அந்தப் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் உள்ள இரும்பு ஜன்னலில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த இரணியல் போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்..
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad