1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்... இரண்டு பேர் கைது.... தொடர் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்... இரண்டு பேர் கைது.... தொடர் விசாரணை.

1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்... இரண்டு பேர் கைது.... தொடர் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர் அதில் தாழக்குடி சந்தவிளை பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன்(22), மற்றும்
அருமநல்லூர் ஏலாப்பாறை பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் அஜிஸ்(19) ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையானது மேலும் தீவிரபடுத்தப்படும் என்றும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.  

இளைஞர்கள் போதை பாதையில் இருந்து விடுபட்டு யில் பயணம் செய்து வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad