அரக்கோணத்தில் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பஞ்சமி நிலமீட்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
அரக்கோணம், மே 28-
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் நைனா, மாசிலாமணி, ஏபி, எம்.சீனிவாசன், கலைமணி சி.
மோகன் , ஈஸ்வரன், குருவை குமார், மோசூர் ராஜேஷ், தனஞ்செழியன், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட பலர் கலந்து கொண் டனர் .சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி
தலைவர். டாக்டர். ஐசக்.அய்யா கலந்து கொண்டு பேசினார் அப்போது பேசி யவர்கள் அரசே! 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களு க்கு பட்டா செய்து கொடு பஞ்சமி நிலங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய உத்தரவை நடைமுறை படுத்துக!
ஆதிதிராவிட மக்கள் அனைவரின் வாழ்விடங்களுக்கும் குடிக்க தண்ணீர், குடியிருக்க வீடு, மற்றும் 'பிணம் புதைக்க சுடுக்காடு'/ பாதை உறுதிபடுத்துக! அனைத்து தரிசு நிலங்களையும் மீட்டு பட்டா வழங்கிடு என வலியுறுத்தி பேசினர்! கண்டன கோஷங்களுடன் ஆர்பாட்டம் நிறைவு பெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக