திருப்பூர் பழனிச்சாமிநகரிலுள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

திருப்பூர் பழனிச்சாமிநகரிலுள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகார்


அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணையருக்கு திருப்பூர் வடக்கு வட்டாசியர் கடிதம்.

அரசு நிலத்தை மீட்க 57.முறைகள் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொட‌ர்பாக தொடர்ச்சியாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவத்தலைவர் சமூக ஆர்வலருமான ஈ.பி.அ.சரவணன் புகாரளித்திருந்தார்.

அதன் பேரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக வைக்கப்பட்டிருந்த அறவிப்பு பலகையை மர்ம நபர்கள் அகற்றியது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென திருப்பூர் வடக்கு வட்டாச்சியர் வே.கதிர்வேல் அவர்கள் காவல் உதவி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது தொடர்பாக புகாரளித்த ஈ.பி.அ.சரவணனுக்கு வடக்கு வட்டாச்சியர்  அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், தொட்டிாபளையம் கிராமம், போயம்பாளையம் பழனிச்சாமி நகர்- (வரி விதிப்பு கதவு எண்.1363/2A மின்இணைப்பு எண்.03 172 010 661 Tf 5 வர்த்தக இணைப்பு) அரசுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள கல்லாங்குத்து நிலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு சொந்தமானது என வருவாய்த்துறை அறிவிப்பு பலகை வைத்ததை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை என்பவர் எடுக்கக் கோரி ஈ.பி.அ.சரவணன் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நேர்வில் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு வட்டம், தொட்டிாபளையம் கிராமம், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2- வது மண்டலம் 8-வது வார்டு, பி.என்.ரோடு, போயம்பாளையம் பஸ் நிறுத்தம், பழனிச்சாமி நகர் அரசுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள கல்லாங்குத்து நிலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விடத்தில் அறிவிப்பு பலகை வைத்து மேற்படி இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்ததை மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர்.

மேற்படி நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை

"நேரடியாக மனுதாரருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad