நிலப் பிரச்சனை (திமுக)தம்பி அண்ணன் குடும்பங்களை கொடூரத் தாக்குதல்! புகார் கொடுத்தும் வாங்க மறுத்த எஸ் ஐ !
கே வி குப்பம் ,மே 21
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அண்ணன் மனைவி மீது கொலை வெறி தாக்குதல்.அண்ணனின் பேத்தியும் விட்டு வைக்காத கொலை வெறி தாக்குதல்.
மயங்கியது போல் நடித்ததால் தாக்கு தலில் இருந்து தப்பித்து சிறுமி புகார் கொடுத்தும் வாங்க மறுத்த பெண் எஸ் ஐ ஆல் நடந்த விபரீதம்!
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுகன்தாங் கல் மேல்விலாச்சூர் பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி இவரது மனைவி ஜெயந்தி முனுசாமியின் உடன் பிறந்தவர் கள் வெங்கடேசன், சந்திர வேலு, மற்றும் ரவி ஆகிய மூன்று தம்பிகள் இவர்கள் தந்தை வழி சொத்தான ஒரு ஏக்கரா மற்றும் 55 சென்ட்களை 36 செண்டுகள் வீதம் பாகப்பிரிவினை செய்து கொண்ட னர் அதில் பத்து சென்ட் நிலம் இடம் மட்டும் இவர்களது தாயார் வசந்தம்மாள் பெயரில் இருந்து வந்ததாக கூறப்படுகி றது இந்த இடத்தை இவர்கள் அண்ணன் தம்பி நான்கு பேர் இடத்திற்கும்செல்வதற் காக வழியாக விட்டு வைத்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை தன் பெயரில் பட்டா செய்து கொண்டதாக சந்திரவேலு திடீரென்று இவர்களை அந்த இடத்தில் கால் வைக்க கூடாது என்று பலமுறை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக கேவி குப்பம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளிக்கப் பட்டு இருந்தது மேலும் கே வி குப்பம் போலீசார் இது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் இது சம்பந்தமாக அந்த ஊர் பகுதியில் சமூக சேவகர் சத்திய வேலு என்பவர் மூலமாக மாவட்ட ஆட்சிய ரை சந்தித்து புகார் அளித்திருந்தனர். இதனால் கோபமடைந்த சந்திரவேலு குடும்பத்தினர் முனுசாமி வீட்டிற்கு செல்லும் குழாயின் பைப்பை உடைத்து ள்ளனர்.வீட்டிற்கு தண்ணீர் வராததால் அவர்களே அந்த குழாயை சரி செய்துள்ள னர் யாரை கேட்டு நீங்கள் சரி செய்யலாம் இது என்னுடைய இடத்தில் உள்ள குழாய் பைப் என்று மீண்டும் அவர்களிடம் சந்திர வேலு தகராறு செய்து முனுசாமியின் மருமகன் சௌந்தரராஜனை சந்திர வேலுவின் தம்பிப் பெண்ணான சங்கவி செருப்பால் அடித்துள்ளார். சந்திரவேலு வின் இரண்டாவது மகள் ஹேமாவதி யோகபிரியா மீது சிறுமி என்று கூட பாராமல் கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில் யோக பிரியா மயங்கியது போல் நடித்ததால் அவர் மீது தாக்குதலை நிறுத்தியுள்ளனர். இல்லை என்றால் அவர் மீது மீண்டும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு இருப்பார்கள்.அந்த சமயத்தில் சவுந்தர் ராஜன் தலையில் ஹேமாவதி மற்றும் சங்கவி ஆகியோர் இரும்புராடால் அடித்ததில் மண்டை உடைந்தது. தடுக்க வந்த முனுசாமியின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர்.
இது குறித்து புகார் அளிப்பதற்காகசந்திர வேலு மீதும் அவரது மகள்கள் மகன்மீதும் கே வி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அந்த சமயம்
பணியில் இருந்தவர் சீதா என்கின்ற பெண் எஸ்.ஐ.இடம் புகார் கொடுத்த போது வாங்க மறுத்துள்ளார்.காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த முனுசாமி மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் மீது காவல் நிலையத்திற்கு முன்பாகவே கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
சென்னையை சேர்ந்த செல்வம் மற்றும் சந்திரசேகர், மற்றும் சந்திர வேலுவின் மனைவியின் தங்கை மகள்கள் மாலினி மற்றும், செல்வா, சந்திரவேலுவின் மனைவி கலைவாணி ஆகியோர் ஜெயந்தியின் கழுத்தில் இருந்த தங்கத் தாலிக்கொடியை பறித்துச் சென்றுள்ள னர்.அப்பொழுது சந்திரவேலுவின் மகள் ஹேமாவதி இரும்பு ராடால் ஜெயந்தி யின் தலையில் கிட்டத்தட்ட ஒன்பது இடங்களில் அடித்ததில் அவர் மயக்கம் போட்டு ரத்தம் சொட்ட சொட்ட அங்கேயே விழுந்துள்ளார். உடனடியாக அவர்களது உறவினர்கள் இவர்களை மீட்டு குடியாத் தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக் கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அடுக்கம்பாறைக்கு மாற்றப்பட்டனர் அங்கு அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சிறுமி யோகபிரியாஅவர்களிட மிருந்து என்னை காத்துக் கொள்வதற் காக நான் மயங்கியது போல் நடித்து தப்பித்துள்ளார்.நினைவு திரும்பாத நிலையில் ஜெயந்திக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறிதளவு இடத்திற்கு அண்ணன் மீதும் அண்ணன் பிள்ளைகள் மற்றும் அண்ணி என்றும் பாராமல் அண்ணனின் மனைவி மீதும் சிறுமி என்றும் பாராமல் அண்ணனின் பேத்தி மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. எஸ். ஐ சீதா மட்டும் முறை யாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந் தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும் என தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக