திருமங்கலம் மோட்டார் வாகன ஆய்வக அலுவலகத்தில், 150 -க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, பேருந்து மற்றும் வேன் ஆகியவற்றை தணிக்கை செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள மோட்டார் வாகன தணிக்கை அலுவலகத்தில், தனியார் பள்ளிகளை சார்ந்த 150 -க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பேருந்துகளை பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது.
இதில் திருமங்கலம் , டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளைச் சார்ந்த வேன் மற்றும் பேருந்துகள் 152 - களை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் திருமங்கலம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில், பேருந்து மற்றும் வேன்களுக்கு டயர், பிரேக், சிசிடிவி கேமரா, ஜி பி ஆர் எஸ் கருவி, வேன் மற்றும் பேருந்துகளின் மேற்கூரை, பக்கவாட்டு பகுதிகள் ஆகியவற்றை பரிசோதனை செய்தனர்.ஓட்டுநர்களுடைய உரிமம் மற்றும் வாகனங்களின் உரிமங்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு நடத்தினர்.
பள்ளி விடுமுறை காலம் என்பதால், கோடை காலத்தில் இது போன்ற சோதனைகளை ஆண்டுதோறும் நடத்தி வருவதாக மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக