மானாமதுரை - நத்தம்புரக்கி கிராமத்திற்கு புதிய பேருந்து வழித்தடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நத்தம்புரக்கி கிராமத்திற்கு மகளிர் கட்டணமில்லா புதிய பேருந்து வழித்தடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் துரை. ராஜாமணி, வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துசாமி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, செய்களத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சுப்பிரமணியம், செய்களத்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, கொன்னக்குளம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் தனசேகரன், கள்ளர் வலசை முன்னாள் ஊராட்சி செயலாளர் செல்வம், கல்லர் வலசை கிளை செயலாளர் நெடுஞ்செழியன், குருந்தன்குளம் இளைஞர் அணி செங்கிஸ்கான், நத்தம்புரக்கி கிளை செயலாளர் கருப்பையா, என்.வலசை கிளை செயலாளர் முத்துராஜா, திமுக கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக