நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சிறுவர் கால்பந்தாட்ட போட்டி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 மே, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சிறுவர் கால்பந்தாட்ட போட்டி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சிறுவர் கால்பந்தாட்ட போட்டி.

நாசரேத், மே 6, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சிறுவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் போட்டியை துவக்கி வைத்தார். நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஜம்மு பகுதியில் இராணுவ வீரராகப் பணியாற்றிவருபவருமாகிய ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் அனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினர்களுக்கு விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். கோடைகால சிறப்பு கால்பந்து பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் 11 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மர்காஷிஸ் ட்விங்லெர்ஸ், மர்காஷிஸ் டைமண்ட்ஸ் என்ற இரு அணிகளாக போட்டியில் பங்கேற்றனர். 

இறுதியில் மர்காஷிஸ் ட்விங்லெர்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் ஆபிரகாம் இம்மானுவேல்,உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர், மூத்த கால்பந்து பயிற்சியாளர் நசரேயன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad