ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 22 ஆவது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 22 ஆவது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 22 ஆவது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள் பள்ளியின் தாளாளர் முனைவர் வி. ரமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்பித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். 

கல்லூரி முதல்வர் முனைவர். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் ஓவரால் சாம்பியன் பட்டத்தினை பெற்றனர். இவ்விழாவினை பேராசிரியர் ஸ்டான்லி ஜாண்சன் தொகுத்து வழங்கினார். 

கல்லூரியின் விளையாட்டு விழாவிற்கு ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜாண் ஆர். டி. சந்தோஷம் அவர்களின் அறிவுரையின்படி கல்லூரியின் முதல்வர் ஜெயக்குமார் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad