கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் வடலூர் வள்ளலார் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாக திகழும், தவத்திரு சுப்புராயர் சுவாமி திருக்கோயில் என்றழைக்கப்படும், அருள்மிகு சுப்பரமணிய சுவாமி திருக்கோயிலில் 48-வது ஆண்டு திருவிளக்கு பூசை நடைபெற்றது.
இத் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18-ஆம் தேதி இந்த பகுதி மக்கள் ஒன்று கூடி இத்தெய்வத்தின் மீதான நம்பிக்கை மற்றும் கருணையினாலும் உலக நன்மைக்காகவும், தங்களின் குடும்ப நன்மை வேண்டியும், அருள்மிகு சண்டிகா பரமேஸ்வரி வேல்வி நடத்தபட்டு கூட்டு வழிபாடாக பெண் பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சிவாச்சாரியார்கள் தமிழில் மந்திரங்கள் கூற பெண் பக்தர்கள் திருவிளக்குகளுக்கு பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட நூற்று கணக்கான பெண் பக்தர்களுக்கு சிவச்சாரியார்கள் சார்பாக மாங்கல்ய பொருட்கள் பிரசங்கங்களாக வழங்கபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக