கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஏ.புளியங்குடி பகுதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ நவகாளி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு விழாக்கள் பூஜைகள் நடைபெற்று வந்தது இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் காப்பு கட்டிய பக்தர்கள் ஊரின் பல்வேறு வீதிகளில் ஊர்வலமாக வந்து மேள தாளங்கள் முழங்க தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக