வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான அருள்மிகு தர்மராஜா துரோபதி அம்மன் ஆலயத்தின் வருடாந்திர தீமிதி திருவிழா, மே 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மகா மகிமையுடன் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக ஏப்ரல் 14ஆம் தேதி, கோட்டகம் கிராமத்திலிருந்து அய்யனார் ஆலயத்திற்கு அருகிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து ஆலயத்தில் காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 18 நாட்கள் மகாபாரதக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்மிக உபன்யாசங்கள், பாவனை நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களை ஆன்மிக சிந்தனையில் ஈடுபடுத்தின.
விழா முக்கிய நிகழ்வுகள்:
-
ஏப்.15: ஜனனமே ஜெயன் சர்ப்ப யாகம்
-
ஏப்.16–21: சந்திரன், சந்தனு, கிருஷ்ணன், பாண்டவர்கள், பாஞ்சாலி ஆகியோரின் பிறப்பும் கல்யாண நிகழ்வுகளும்
-
ஏப்.25: பாஞ்சாலி தேவியார் திருக்கல்யாணம்
-
ஏப்.28–30: அரவான் பிறப்பு, கிருஷ்ணர் துகில் அளித்தல், அர்ஜுனன் தபசு
-
மே 1: அபிஷேக ஆராதனை, பூங்கரக அலங்காரம், வீதி உலா
-
மே 2: கிருஷ்ணன் தூது, அரவான் களபுலி, பாஞ்சாலி கூந்தல் முடிதல்
-
மே 3: இரவு 6 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான குலதெய்வ பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மே 4 (சனிக்கிழமை) அன்று மஞ்சள் நீராட்டு விழா, பாஞ்சாலி தேவியார் வீதி உலா நடைபெறுகிறது.
மே 5 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 7 மணிக்கு தர்மராஜர் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் குலதெய்வ பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக