நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் மேதின நாளில் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தல்.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 மே, 2025

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் மேதின நாளில் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தல்..


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வேலாயுதம் மேல்நிலைப்பள்ளியில் 1984-85 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சங்கமம் நிகழ்ச்சியில் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தங்கது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கொண்டதில் பேரானந்தம் அடைவதாக முன்னாள் மாணவர்கள் தரப்பில் தெரிவித்து கொண்டனர்.


மேலும் முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டியும், ஆசிரியர்களுக்கு  நினைவு பரிசுகளை வழங்கியும் மகிழ்ந்தனர், இந்த மே தினத்தில் தொழிலாளர்களை போற்றும் விதமாக தாங்கள் பயின்ற பள்ளியில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 70-க்கு மேற்பட்டவர்களை அழைத்து பிரியாணி உள்ளிட்ட கரி விருந்து வைத்து முன்னாள் மாணவர்கள் அவர்களை அசத்தினர். இந்த சங்கமம் நிகழ்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad