இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் ஏர்வாடி தர்கா 851 ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா மிக விமர்ச்சியாக நடைபெற்றது. ஏர்வாடி மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் சையது இப்ராஹிம் தர்ஹா வின் 851ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெற்றது.
இன்று அதிகாலை 5 மணி அளவில் மேளதாளம் முழங்க யானைகள் குதிரைகள் அணிவித்து நாட்டியமாட சந்தனக்கூடு ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் புனித மக்பர்வில் சந்தனம் பூசப்பட்டது.தொடர்ந்து மின் விளக்கு அலங்காரத்துடன் ரதம் முக்கிய வீதிகளில் பவனி வந்து குத்புல் அக்தாப் சுல்தான் சையது இப்ராஹிம் தர்ஹா வந்தடைந்தது. இவ்விழாவில் கேரளா மாநிலம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து சமூக மக்களும் திரலாக கலந்து கொண்டனர்.
ஏர்வாடி சந்தனக் கூடு திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டன இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் விடுப்பு அறிவித்துள்ளார். மாவட்ட காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகமது பொதுமக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக