சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா !
ராணிப்பேட்டை , மே 09 -
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை தனியார் மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் முன்னிலை வகித்தனர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்று குத்து விளக்கேற்றி, சமுதாய வளைகாப்பு விழாவினில் சீர்வரிசைகள் வழங்கி கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்,
தமிழக குரல் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக